இந்தியா

பஞ்சாப் பேரவைத் தேர்தல் பிரசாரம் நிறைவு

DIN

பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. 

பஞ்சாபில் 117 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில், ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், பாரதிய ஜனதா கூட்டணி என பலமுனைப் போட்டிகள் நிலவுகிறது.

தேர்தலில் காங்கிஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைக்க களமிறங்கியுள்ளது.

மறுபுறம் எதிர்க்கட்சியான ஆம் ஆத்மியும் ஆட்சியை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது. காங்கிரஸுக்கு ஆதரவாக ராகுல், பிரியங்கா, ஆம் ஆத்மிக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால், பாஜக கூட்டணிக்கு ஆதவராக பிரமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

பஞ்சாபில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இறுதிநாளான இன்று கட்சித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT