முகப்பு
இந்தியா

திறந்தவெளியில் படம் பார்க்கும் வசதி: ஹைதராபாத்தில் வருகிறது

திறந்தவெளியில் அப்படியே சொகுசாக கார் மீது அமர்ந்து கொண்டு படம் பார்க்கும் வசதியை அனுபவித்திருக்கிறீர்களா? ஆம்.. விரைவில் இந்த வசதி ஹைதராபாத்தில் வரவிருக்கிறது.

Updated On : 21 பிப்ரவரி, 2022 at 5:13 PM
திறந்தவெளியில் படம் பார்க்கும் வசதி: ஹைதராபாத்தில் வருகிறது
பகிர்:


ஹைதராபாத்: திறந்தவெளியில் அப்படியே சொகுசாக கார் மீது அமர்ந்து கொண்டு படம் பார்க்கும் வசதியை அனுபவித்திருக்கிறீர்களா? ஆம்.. விரைவில் இந்த வசதி ஹைதராபாத்தில் வரவிருக்கிறது.

டிரைவ்-இன்-தியேட்டர் என்ற திட்டத்துக்கான பரிந்துரையை ஹைதராபாத் மாநகராட்சி வழங்கியுள்ளது.

மூடிய திரையரங்குகளுக்கு பதிலாக திறந்தவெளியில், காரில் அமர்ந்து கொண்டு படம் பார்ப்பது என்பது ஒரு மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும். இதற்கான சிறந்த இடத்தை தேடும் பணி நடந்து வருகிறது.

Advertisement

ஒரு வேளை, இடம் தேர்வு செய்யப்பட்டால், மாநில அரசு அதற்கு ஒப்புதல் அளித்து, தனியார் மற்றும் மாநில அரசின் கூட்டணியுடன் விரைவில் இந்த திட்டம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு மிகப்பெரிய திரைக்கு முன்னால், நூற்றுக்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தும் வசதியை ஏற்படுத்தி, அதனுடன் உணவகத்தையும் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.