இந்தியா

'உதவி வேண்டாம்; நீதி வேண்டும்' - உன்னாவ் பெண் விவகாரத்தில் பிரியங்கா காந்தி கருத்து

உன்னாவ் பெண் உயிரிழந்த விவகாரத்தில் பெண்ணின் பெற்றோர்கள் உதவியை விரும்பவில்லை, மாறாக நீதி வேண்டும் என்று விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

DIN

உன்னாவ் பெண் உயிரிழந்த விவகாரத்தில் பெண்ணின் பெற்றோர்கள் உதவியை விரும்பவில்லை, மாறாக நீதி வேண்டும் என்று விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

கடந்த டிசம்பர் மாதம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் காணாமல் போன நிலையில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி அவரது அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டது. 

மாநில முன்னாள் அமைச்சரின் மகன் ராஜோல் சிங்கிற்கு சொந்தமான வீட்டில் இருந்து பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

மேலும், தலித் பெண் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டதாகவும் உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உயிரிழந்த பெண்ணின் உறவினர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை போலியானது என்று பெண்ணின் பெற்றோர்கள் கூறுகின்றனர். இரண்டு முறை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இரண்டின் அறிக்கைகளும் வெவ்வேறாக உள்ளன, சில காவல்துறை அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். 

அவர்கள் பண உதவியை நாடவில்லை. ஆனால் நீதி வேண்டும் என்று போராடுகிறார்கள்' என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டோக்கியோவில் பிரதமர் மோடி!

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

முதலமைச்சா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

கடகத்துக்கு யோகம்.. தினப்பலன்கள்!

சத்தீஸ்கா் மழை வெள்ளம்: திருப்பத்தூரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT