படுகொலை செய்யப்பட்ட ஹா்ஷா 
இந்தியா

பஜ்ரங் தளத் தொண்டா் படுகொலை: 6 பேர் கைது

கர்நாடகத்தில் பஜ்ரங் தள அமைப்பின் தொண்டர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 6 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

DIN

கர்நாடகத்தில் பஜ்ரங் தள அமைப்பின் தொண்டர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 6 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கா்நாடக மாநிலம், சிவமொக்காவில் உள்ள சீகேஹட்டி பகுதியில் தையலராகப் பணியாற்றி வந்தவா் ஹா்ஷா(26). இவா், பஜ்ரங் தள அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தாா். இந்நிலையில், பாரதி காலனி, ரவிவா்மா லேனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு மா்ம நபா்கள் சிலரால் ஹா்ஷா குத்துவாளால் குத்திப் படுகொலை செய்யப்பட்டாா்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹா்ஷாவை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதனால் ஆத்திரமடைந்த பஜ்ரங் தளம் உள்ளிட்ட ஹிந்து மத அமைப்பினா் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினா். சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்குத் தீ வைத்தனா். கட்டடங்கள், கடைகள், வாகனங்களை கல்வீசித் தாக்கினா். இதனால் சிவமொக்காவில் பதற்றம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, சிவமொக்கா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இப்படுகொலையில் தொடர்புடைய 6 பேரைக் கைது செய்ததுடன், 12 பேரிடம் விசாரணையை மேற்கொண்டு வருவதாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லஷ்மி பிரசாத் இன்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் ஹிஜாப் சர்ச்சை அதிகரித்து வரும் வேளையில் இந்து மத அமைப்பைச் சேர்ந்த இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT