முகப்பு
இந்தியா

கார் ஓட்டுநர்களைக் கொன்று கார்களை கொள்ளையடிக்கும் கும்பல் பிடிபட்டது

ஹரியாணாவில், தேசிய நெடுஞ்சாலையோரம் கொலை செய்யப்பட்டிருந்த கார் ஓட்டுரைக் கொன்று, கார் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை குருகிராம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
கார் ஓட்டுநர்களைக் கொன்று கார்களை கொள்ளையடிக்கும் கும்பல் பிடிபட்டது
பகிர்:


குருகிராம்: ஹரியாணாவில், தேசிய நெடுஞ்சாலையோரம் கொலை செய்யப்பட்டிருந்த கார் ஓட்டுரைக் கொன்று, கார் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை குருகிராம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

48வது தேசிய நெடுஞ்சாலையில், 56 வயது கார் ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், ஒரு பெண் உள்பட 6 பர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர்.

இந்து கைது நடவடிக்கையின் மூலம் காவல்துறையினர் ஏற்கனவே நடந்த மூன்று கொலைகளிலும் துப்புக்கிடைத்துள்ளது.

Advertisement

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வழக்கமாக இவர்கள் ஒரு காரை வாடகைக்குப் பிடித்து, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று கார் ஓட்டுநரைக் கொன்றுவிட்டு, கார் மற்றும் கார் ஓட்டுநரின் பொருள்களை கொள்ளையைடித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் விஷால் மற்றும் அவரது காதலி ரேகா ஆகியோர் தில்லியைச் சேர்ந்தவர்கள், விநோத், ஜிது, ரவி, ராகுல ஆகியோர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்  என்பதும் தெரிய வந்துள்ளது.

குற்றவாளிகள் இதுபோன்ற ஏராளமான குற்றங்களை ராஜஸ்தானில் செய்திருப்பதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments