இந்தியா

உ.பி.யில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.45 சதவீத வாக்குகள் பதிவு

DIN

உத்தரப் பிரதேசத்தில் புதன்கிழமை நான்காம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 37.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின்படி, பிலிபித் தொகுதியில் அதிகபட்சமாக 41.21 சதவீத வாக்குகளும், அதைத் தொடர்ந்து லக்கிம்பூர் கெரி 40.97 சதவீதம் மற்றும் ஃபதேபூர் 40.17 சதவீதமும் பதிவாகியுள்ளன. 

ஹர்தோய் தொகுதியில் மதியம் 1 மணி வரை 34.45 சதவீத வாக்குகளும், உன்னாவ் தொகுதியில் 35.01 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள் வாக்களித்தனர்.

பிலிபித், லக்கிம்பூர் கெரி, சீதாப்பூர், ஹர்தோய், உன்னாவ், லக்னோ, ரேபரேலி, பண்டா மற்றும் ஃபதேபூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 59 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மீதமுள்ள 3 கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை.. காப்பாற்றிய குடியிருப்புவாசிகள்!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT