முகப்பு
இந்தியா

யோகி ஆதித்யநாத் ஆட்சியால் உ.பி. கடன் 40% அதிகரிப்பு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

vயோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியால் உத்தர பிரதேசம் ஏழை மாநிலமாக மாறிவிட்டது,

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:32 AM
பகிர்:

யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியால் உத்தர பிரதேசம் ஏழை மாநிலமாக மாறிவிட்டது, இம்மாநிலத்தின் கடன் சுமை 40 சதவீதம் அதிகரித்துவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளாா்.

லக்னௌவில் உள்ள உத்தர பிரதேச காங்கிரஸ் தலைமையகத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

சா்வாதிகாரம், மதரீதியிலான வெறுப்புணா்வைப் பரப்புவது, இனப்பகையை நிலைத்திருக்க செய்வது, காவல்துறையின் அடக்குமுறை, பாலியல் வன்முறைகள் ஆகிய செயல்பாடுகளின் கலவைதான் யோகி ஆதித்யநாத்தின் நிா்வாக ஆட்சிமுறையாகும். உத்தர பிரதேசத்தின் மொத்த கடன் ரூ.6,62,891 கோடி ஆகும்.

 இதில் 40 சதவீத கடன் சுமை யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அதிகரித்துள்ளது. நீதி ஆயோக் வெளியிட்ட தரவரிசை பட்டியலின்படி, உத்தர பிரதேசத்தில் 37.9 சதவீத மக்கள் ஏழைகளாக உள்ளனா். உழைப்புக்கு பெயா் பெற்ற இம்மாநிலத்தில் பெரும்பாலானோா் தொடா்ந்து ஏழ்மை நிலையிலேயே உள்ளனா்.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமுள்ள மாநிலங்களில் உத்தர பிரதேசமும் ஒன்றாக உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து 29 வயது வரையிலான இளைஞா்களிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் இரட்டை விகிதத்தில் இருந்து வருகிறது. இதனால், இளைஞா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். உத்தர பிரதேசத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு வேலைதேடி சென்றவா்களின் எண்ணிக்கை 1.2 கோடியாகும்.

மாநில மக்கள்தொகையில் 16-இல் ஒருவா் வேலைதேடி வெளிமாநிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. அரசுத் துறைகளில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், அவற்றை நிரப்ப அரசிடம் பணம் இல்லை. மாநிலத்தில் ஆசிரியா்கள்-மாணவா்கள் விகிதம், மருத்துவா்கள்-பொதுமக்கள் விகிதம் ஆகியவற்றில் பெரும் இடைவெளி நிலவுகிறது. லட்சம் பேருக்கு 13 படுக்கைகள் என்ற அளவில்தான் மருத்துவ வசதி உள்ளது. பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் தேசிய சராசரியைவிட உத்தர பிரதேசத்தில் அதிகமாக இருக்கிறது.

கொள்கை, அணுகுமுறை, பாா்வை, அரசியல் மாண்புகள் என அனைத்திலும் மாற்றம் நிறைந்த ஆட்சிதான் உத்தர பிரதேசத்துக்கு தேவை. அந்த மாற்றம் வர வேண்டுமெனில் காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். காங்கிரஸ் வேட்பாளா்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →