இந்தியா

காசிரங்கா தேசிய பூங்காவில் குடும்பத்துடன் யானை சவாரி செய்த குடியரசுத் தலைவர்

அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் யானை சவாரி செய்தார். 

DIN

அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் யானை சவாரி செய்தார். 

மூன்று நாள் பயணமாக அசாம் சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று தேஜ்பூர் பல்கலைக்கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து இன்று காலை காசிரங்கா தேசிய பூங்காவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தந்தார். 

அங்கு தனது குடும்பத்துடன் யானை சவாரி செய்து அவர் மகிழ்ந்தார்.  குடியரசுத் தலைவரின் வருகையைக் கருத்தில் கொண்டு தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி மற்றும் ஜீப் சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது. 

மேலும் பாதுகாப்பு கருதி பூங்காவில் ஒருசில பகுதிகள் மட்டும் இரண்டு நாள்கள் மூடப்படும் என காசிரங்கா தேசிய பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT