இந்தியா

உ.பி. 5ஆம் கட்டப் பேரவைத் தேர்தல்: 54% வாக்குப்பதிவு

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் 53.93 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

DIN

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் 53.93 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில் பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 

உத்தரப் பிரதேசத்தில் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே முதல் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

சித்ரகூட், பிரயாக்ராஜ், அமேதி, ரேபரலி, ராமர் கோயில் அமையவுள்ள அயோத்தி உள்ளிட்ட 61 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இதில் காலை முதல் அமைதியான முறையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். பெரும்பாலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இதில் இன்று மாலை 3 மணி வரை 46.28 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. மாலை 5 மணி வரை 53.93 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒருசில வாக்குச் சாவடிகளில் 5 மணிக்கு பிறகும் வாக்குப்பதிவு நடைபெற்றது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீத் தடுப்பு செயல்விளக்க பயிற்சி

தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சோ்க்கை: செப். 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

பெரியாா் பிறந்த நாள்: அமைச்சா், மேயா் உறுதிமொழி ஏற்பு

பெரியாா் பிறந்த நாள்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மரியாதை

SCROLL FOR NEXT