இந்தியா

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் 44 நக்சல்கள் சரண்

DIN

புது தில்லி: சத்தீஸ்கர் மாநிலம், சுக்மாவில் உள்ள சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) முன்பு ஒன்பது பெண்கள் உள்பட குறைந்தது 44 நக்சல் தீவிரவாதிகள் சரணடைந்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கிஸ்டாராம், பெஜி மற்றும் சிந்தன்லார் பகுதிகளில் செயல்பட்டு வந்த 44 நக்சல் தீவிரவாதிகள் சனிக்கிழமை சரணடைந்தனர். அவர்கள் வெற்று மாவோயிஸ்ட் சித்தாந்தத்தால் ஏமாற்றமடைந்துவிட்டோம் என்று அவர்கள் கூறியதாக சிஆர்பிஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.

படைப்பிரிவு எண் 4 இல் தீவிர உறுப்பினராக இருந்த ஒரு மேட்காம் துலாவைத் தவிர, 44 பேரும் ஏழ்மையான நிலையில் இருந்தவர்கள் மற்றும் ரூ.2 லட்சம் பரிசுத் தொகையும் வைத்திருந்தனர்.

மேலும் மாநில அரசின் புதிய விடியல் என்னும் 'புனா நர்கோம்' நக்சல் மறுவாழ்வு திட்டத்தால் கிளர்ச்சியாளர்கள் செல்வாக்கு பெற்றதாக தெரிவித்தனர்.

மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக மத்தியப் பாதுகாப்புப் படைகள் உள்ளூர் மக்களுக்காக பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்களைக் கட்டுதல் போன்ற பல நலத்திட்டங்களைத் தொடங்கியுள்ளன என்று சிஆர்பிஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்டோபர் 2021 இல், சுக்மாவில் பாதுகாப்புப் படையினரிடம் ஒன்பது பெண்கள் உள்பட 43 நக்சல்கள் தீவிரவாதிகள் சரணடைந்தனர். இவர்கள் சிந்தகுஃபா மற்றும் டோங்பால் பகுதிகளில் செயல்பட்டு வந்தவர்கள் மற்றும் மாவோயிஸ்டுகளின் முன்னணி அமைப்பில் உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள், அவர்களில் ஒருவர் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வைத்திருந்தார்.

சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மேலும் கூறுகையில், சரணடைந்த நக்சல் தீவிரவாதிகள் தலைமை மற்றும் சித்தாந்தத்தின் மீது ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் வாழ்க்கையின் சரியான பாதைக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்தனர்.

மாநில அரசின் புதிய விடியல் திட்டத்தின் கீழ் இதுவரை குறைந்தது 335 நக்சல் தீவிரவாதிகள் சரணடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT