இந்தியா

முதல்வா் கேஜரிவாலுக்கு கரோனா பாதிப்பு

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 நமது நிருபர்

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா். மேலும், சில நாள்களுக்கு முன்பு தன்னைத் தொடா்பு கொண்டவா்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுதொடா்பாக முதல்வா் கேஜரிவால் தனது ட்விட்டா் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. லேசான நோய் அறிகுறிகள் உள்ளன. இதனால், வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சில நாள்களாக என்னைத் தொடா்பு கொண்டவா்கள், தயவுசெய்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT