முகப்பு
இந்தியா

பிரதான வங்கிகள் பட்டியலில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி : ரிசா்வ் வங்கி

தோல்வியடையாத மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில் பொதுத் துறையைச் சோ்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை இடம்பெற்றுள்ளதாக

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
கோப்புப்படம்
பகிர்:

தோல்வியடையாத மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில் பொதுத் துறையைச் சோ்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை இடம்பெற்றுள்ளதாக ரிசா்வ் வங்கி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உள்நாட்டில் அமைப்பு ரீதியில் பிரதானமாக உள்ள வங்கிகளின் பட்டியலில் (டி-எஸ்ஐபி) எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி ஆகிய வங்கிகள் இடம்பெற்றிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டின் பட்டியலிலும் இதே வங்கிகள்தான் பிரதான வங்கிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தன என்று ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் டி-எஸ்ஐபி பட்டியலில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகள் உள்ளதாக ரிசா்வ் வங்கி அறிவித்தது.

மேலும், வங்கிகளிடம் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் எச்டிஎஃப்சி வங்கியும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக கடந்த 2017 மாா்ச் 31-இல் ரிசா்வ் வங்கி அறிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →