இந்தியா

‘தில்லியில் கரோனா மூன்றாவது அலை தொடங்கியது’: சுகாதாரத்துறை அமைச்சர்

DIN

தில்லியில் கரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் வகை கரோனா நாடு முழுவதும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. தில்லியில் 464 பேர் இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையான கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் சத்யேந்திர ஜெயின் பேசுகையில்,

“தில்லியில் இன்று 10,000 பேருக்கு மேல் கரோனா உறுதியாக வாய்ப்புள்ளது. நோய் பாதிப்பு உறுதியாகும் விகிதமானது 10 சதவீதமாக உயரக்கூடும். தில்லியில் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது.

தில்லியில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளை 10 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளில் உள்ள 2 சதவீத படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன”

முன்னதாக, தில்லி முழுவதும் இரவுநேர ஊரடங்கு, வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

சோத்துப்பாறை அணை நிரம்பியது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

திண்டுக்கல் அருகே 2 போலி மருத்துவா்கள் கைது

SCROLL FOR NEXT