இந்தியா

வரி செலுத்துவோருக்கு ரூ.1.50 லட்சம் கோடி திருப்பி அளிப்பு

DIN

வரி செலுத்துவோருக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ.1.50 லட்சம் கோடி மதிப்பிலான தொகையை திருப்பி அளித்துள்ளதாக (ரீஃபண்ட்) வருமான வரித் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித் துறையின் ட்விட்டா் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2021 ஏப்ரல் 1 முதல் 2022 ஜனவரி 3 வரையிலான காலகட்டத்தில் ரூ.1,50,407 கோடி மதிப்பிலான தொகையை வருமான வரி திருப்பி அளித்துள்ளது. மொத்தம் 1.48 கோடி பேருக்கு இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது. இதில், 2021-22 மதிப்பீட்டு ஆண்டுக்கு ரூ.21,323.55 கோடி வழங்கப்பட வேண்டிய 1.1 கோடி ரீஃபண்டுகளும் அடங்கும்.

வருமான வரி ரீஃபண்டாக 1.46 கோடி பேருக்கு ரூ.51,194 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பெருநிறுவனங்களுக்கான வரி ரீஃபண்ட் பிரிவில் 2.19 லட்சம் பேருக்கு ரூ.99,213 கோடியை திருப்பி வழங்கியுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT