காஷ்மீர்: தொடரும் என்கவுன்டர், 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 
இந்தியா

காஷ்மீர்: தொடரும் என்கவுன்டர், 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷா-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 3 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனா்.

DIN

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷா-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 3 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனா்.

புல்வாமா மாவட்டம் சந்த்கம் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினா் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் தரப்பில்  பதில் தாக்குதல் தரப்பட்டது. சிறிது நேரத்தில் இந்த மோதல் முடிவுக்கு வந்தது. இதில் 3  பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள்  ஜெய்ஷா-இ-முகமது அமைப்பில் இருந்துகொண்டு பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவந்தவா்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. பலியானவர்களிடமிருந்து ஏகே ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும், புல்வாமா பகுதியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை சாலையில் நடைப்பயிற்சி செய்த பிரான்ஸ் அதிபர்!

எஸ்ஐஆர்! குஜராத்தில் புதியதாக 5.6 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.90.69 ஆக நிறைவு!

ஃபீல்டிங்கில் அசத்திய இலங்கை.. இந்திய பயிற்சியாளர்களைப் பாராட்டி ஜெயசூர்யா பெருமிதம்!

வங்கதேச பிரதமராகப் பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்!

SCROLL FOR NEXT