இந்தியா

ஐஐடி குவஹாட்டியில் 60 பேருக்கு கரோனா: கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிப்பு

ANI

அசாமின் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்படி, 60 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, இந்தியத் தொழில்நுட்பக் கழகம்(ஐஐடி) குவாஹாட்டி, கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொற்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் இடம் பற்றிய விவரங்கள் அனைத்தும் வடக்கு குவஹாட்டி வருவாய் வட்டம் ஐஐடி குவஹாட்டியில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களின் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமீபத்தில் தொடர்பு கொண்ட நபர்களிடம் மாதிரி பட்டிலைத் தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக  குவஹாட்டி வடக்கு வட்ட அதிகாரி திருமதி ரஷ்மி பிரதாப் கூறியுள்ளார். 

முன்னதாக, அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 591 பேர் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT