இந்தியா

நாடாளுமன்ற ஊழியர்கள் 400 பேருக்கு கரோனா

நாடாளுமன்ற ஊழியர்கள் 400 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN


நாடாளுமன்ற ஊழியர்கள் 400 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: 

"தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, ஜனவரி 6, 7 தேதிகளில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 400 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலான ஊழியர்களுக்கு எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.

கரோனா பரவலைத் தடுக்க நாடாளுமன்றத்துக்கு வருபவர்களுக்கு மேலும் சில பரிசோதனைகள் நடத்தப்படும்."

தில்லியில் சனிக்கிழமை 20,181 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 8 மாதங்களில் இதுவே அதிகபட்ச பாதிப்பு.

முன்னதாக, அனைத்து ஊழியர்களுக்கு கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொள்ள வேண்டும் என  மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மற்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞா் தற்கொலை

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

ரயிலிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலத்த காயம்

மதுரை மாவட்டத்தில் 3.80 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT