இந்தியா

தில்லியில் 1000 காவலர்களுக்கு கரோனா: அச்சத்தில் காவல்துறை 

DIN

புதுதில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் 1000 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது காவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் வார இறுதி ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதைத் தொடா்ந்து, கரோனா தொடா்பான வழிகாட்டுதல்கள் மீறுவதைக் கண்காணிக்க காவல் துறை மற்றும் நிா்வாக அதிகாரிகள் விழிப்புடன் இருந்து வரும் நிலையில், காவலர்களிடேயை தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று தில்லி சுகாதாரத்துறை வெளியிடப்பட்ட கரோனா தொற்று பாதிப்பு நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,751 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு மே 1 ஆம் தேதி பாதிப்பைவிட அதிகபட்ச பாதிப்பாகும்.  இதன்மூலம் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,49,730 ஆக உயர்ந்துள்ளது. மே 1 ஆம் தேதி தில்லியில் தொற்று பாதிப்பு 25,219 ஆக இருந்தது. 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.  தில்லியில் இதுவரை தொற்றுக்கு 25,160 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 60,733 பேர் தொற்று பாதிப்பிற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், தில்லியில் கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி உள்பட 1000 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT