கோப்புப்படம் 
இந்தியா

கிருஷ்ணா நதியில் மூழ்கி 5 மாணவர்கள் பலி

ஆந்திரப் பிரதேசத்தில் கிருஷ்ணா ஆற்றில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

DIN

ஆந்திரப் பிரதேசத்தில் கிருஷ்ணா ஆற்றில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் ஏட்டுரு(yeturu) கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேர், கிருஷ்ணா ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். 

இதையடுத்து திங்கள்கிழமை மாலை அவர்களைக் காணவில்லை என்று பெற்றோர் தேடியபோது அவர்களின் உடைகள் மற்றும் சைக்கிள் ஆற்றங்கரையில் இருந்ததைப் பார்த்து தேடியுள்ளனர். 

பின்னர் காவல்துறைக்கு தகவல் அளித்ததன்பேரில் அவர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சன்னி, பாலா இயேசு, அஜய், ராகேஷ், சரண் ஆகிய 5 மாணவர்களின் உடலையும் கைப்பற்றினர். 

நேற்று பிற்பகல் 2 மணியளவில் அவர்கள் ஆற்றுக்கு வந்ததாகவும் இரவுதான் பெற்றோர்கள் தேடியதாகவும் பின்னர் உள்ளூர்காரர்களின் உதவியுடன் சிறுவர்களின் உடல் மீட்கப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட சிறுவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறை இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT