இந்தியா

அச்சத்தில் தில்லி காவல்துறை: 1,700 காவலர்களுக்கு கரோனா

ANI

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் 1700 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, காவலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் முதல் இரவு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, கரோனா தொடா்பான வழிகாட்டுதல்கள் மீறுவதைக் கண்காணிக்கக் காவல் துறை மற்றும் நிா்வாக அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், காவலர்களிடேயை தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

முன்னதாக, சுமார் 1,000 தில்லி காவலர்களுக்கு கரோனா பாதிப்பு  இருந்த நிலையில், தற்போது இந்த பாதிப்பு 1,700 ஆக அதிகரித்துள்ளது. 

தில்லி காவல்துறை தலைமையகத்தில் கரோனா நேர்மறையானவர்கள் அனைவரும் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,259 பேருக்குத் தொற்று இருப்பதாக உறுதியாகியுள்ளது. பாதிப்பு விகிதம் 25,65 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. மேலும், ஒரேநாளில் 23 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 25,200 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT