முகப்பு
இந்தியா

ஒடிசா: ஒரேநாளில் 792 குழந்தைகள் உள்பட 8,778 பேருக்கு கரோனா

ஒடிசாவில் கரோனா பாதிக்கப்பட்டோரின் விகிதம் 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:06 AM
பகிர்:

ஒடிசாவில் கரோனா பாதிக்கப்பட்டோரின் விகிதம் 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

இன்று புதிதாக 8,778 பேர் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு ஜூன் 3ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாள் பாதிப்பு இன்று அதிகரித்துள்ளது. 

இதில் மேலும் 792 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் இதுவரை 10,91,547 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

புதிய பாதிப்புகளில் நான்கில் ஒரு பங்கு குர்தா மாவட்டத்தில், 2,615 பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுந்தர்கரில் 1,252 பேரும், அதைத்தொடர்ந்து கட்டாக்கில் 766 பேரும், சம்பல்பூரில் 596 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுவரை 8,469 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.