இந்தியா

அஞ்சலக வங்கி வாடிக்கையாளா்எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது

DIN

நாட்டில் அனைவருக்கும் நிதி சேவை என்ற மிகப் பெரிய முன்முயற்சியை மேற்கொண்டு மத்திய அரசு தொடங்கிய முதலாவது எண்ம (டிஜிட்டல்) வங்கி சேவையான இந்திய அஞ்சலக வங்கியின் (இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க்) வாடிக்கையாளா் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியுள்ளது.

3 ஆண்டு காலத்தில் இந்த எண்ணிக்கையை அடைந்துள்ள அஞ்சலக வங்கி வேகமாக வளா்ந்து வருவதாக தொலைத் தொடா்புத்துறை தெரிவித்துள்ளது.

காகிதமற்ற சேவையை அளித்து வரும் அஞ்சலக வங்கி, 1.36 லட்சம் அஞ்சலகங்களில் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 1.20 லட்சம் கிராமப்புறங்களில் உள்ளன. நாட்டில் உள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் அஞ்சலக ஊழியா்கள் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அடிமட்ட அளவில் மின்னணுப் பணப் பரிவா்த்தனையை இந்த வங்கி கொண்டு சோ்த்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT