நிகழ்வாண்டின் முதல் மனதின் குரல் நிகழ்விற்கான ஆலோசனைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுடன் மனதின் குரல் என்ற தலைப்பின் கீழ் பிரதமர் மோடி உரையாற்றுவார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
“இம்மாதம் 30-ம் தேதி 2022-ன் முதலாவது மனதின் குரல் நிகழ்வு நடைபெறவுள்ளன. உங்களின் ஊக்கமளிக்கும் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் தலைப்புகள் பகிர்ந்து கொள்வதற்கு ஏராளமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அவற்றை @mygovindia அல்லது நமோ செயலியில் பகிருங்கள். 1800-11-7800 என்ற எண்ணுக்கு அழைத்து உங்களின் தகவலைப் பதிவு செய்யுங்கள்”.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.