கோப்புப்படம் 
இந்தியா

சீனாவின் சட்ட விரோத பாலத்தை மோடி திறந்துவைப்பாரோ என அச்சப்படுகிறேன்: ராகுல் காந்தி

பாங்காங் ஏரி அருகே கட்டப்பட்டுள்ள பாலம், இரு கரையோரத்திலும் ராணுவத்தை விரைந்து குவிக்க சீனாவிற்கும் உதவுகிறது.

DIN

இந்திய, சீன எல்லையான லடாக்கில் பாங்காங் ஏரி அருகே சீனா சட்டவிரோதமாக பாலம் கட்டிவருவதாக செய்தி வெளியானது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக ராகுல் காந்தி எழுப்பியுள்ளார். முன்னதாக, இதில் பிரதமர் அமைதி காப்பதாக ராகுல், ஜனவரி 4ஆம் தேதி விமர்சித்திருந்தார். இந்நிலையில், பாங்காங் ஏரியில் சீனா கட்டிவருவதாக கூறப்படும் பாலத்தை சுட்டுக்காட்டும் விதமாக ஒரு புகைப்படத்தை ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "சீனா, நம் நாட்டில் சட்ட விரோதமாக பாலம் கட்டிவருகிறது. இதில், பிரதமர் அமைதி காப்பதால் சீன ராணுவத்தின் அணுகுமுறை அதிகரித்துள்ளது. இந்த பாலத்தை திறந்து வைக்க பிரதமர் செல்றுவிடக்கூடாது என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாங்காங் ஏரி அருகே கட்டப்பட்டுள்ள பாலம், இரு கரையோரத்திலும் ராணுவத்தை விரைந்து குவிக்க சீனாவிற்கும் உதவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: பொதுமக்கள், விவசாயிகள் பாதிப்பு

ஆசிரியா் தோ்வுக்கான முன்னேற்பாடுகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

சின்னசேலத்தில் 3 கடைகளில் ரூ.72 ஆயிரம் திருட்டு

கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியா்கள் போராட்டம்

புதுவை மீனவா்களின் படகுகளை விடுவிக்க ஆந்திர முதல்வருக்கு ரங்கசாமி கடிதம்

SCROLL FOR NEXT