இந்தியா

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு கரோனா பாதிப்பு

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான அச்சுதானந்தனுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

98 வயதான அவரை கவனித்துக்கொண்ட செவிலியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அவருக்கும் சோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, அவரது மகன் அருண்குமார் வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். 

கடந்த 2006-2011 வரை முதல்வராகவும், 2011-2016 வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

SCROLL FOR NEXT