சமாஜ்வாதியில் இணைந்த இந்தியாவின் உயரமான மனிதர் 
இந்தியா

சமாஜ்வாதியில் இணைந்த இந்தியாவின் உயரமான மனிதர்

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரை சேர்ந்த இவரின் உயரம் 2.4 மீட்டர் (8 அடி 1 அங்குலம்). உலகின் உயரமான மனிதரை விட இவர், 11 சென்டிமீட்டர்தான் உயரம் குறைவு.

DIN

இந்தியாவின் உயரமான மனிதராக கருதப்படும் தரமேந்திர பிரதாப் சிங், சமாஜ்வாதி கட்சியில் நேற்று இணைந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரை சேர்ந்த இவரின் உயரம் 2.4 மீட்டர் (8 அடி 1 அங்குலம்). உலகின் உயரமான மனிதரை விட இவர், 11 சென்டிமீட்டர்தான் உயரம் குறைவு.

தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவரின் வருகை கட்சியை பலப்படுத்தும் என சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் நரேஷ் உத்தம் பட்டேல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சௌத்ரி வெளியிட்ட அறிக்கையில், "கட்சியின் கொள்கைகள் மற்றும் அகிலேஷ் யாதவின் தலைமை மீது நம்பிக்கை தெரிவித்து, பிரதாப்கரை சேர்ந்த தர்மேந்திர பிரதாப் சிங் இன்று சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். 

மாநிலத் தலைவர் நரேஷ் உத்தம் படேல், தர்மேந்திர பிரதாப் சிங்கின் வருகையால் சமாஜ்வாதி கட்சி வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமாஜ்வாதியில் இணைந்தது குறித்து தரமேந்திர பிரதாப் சிங் கூறுகையில், "உயரத்தால் நான் நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டேன். நான் வெளியே செல்லும் போது எல்லாம் அதிக கவனத்தை ஈர்க்கிறேன். நான் மிகவும் பிரபலமாக இருக்கிறேன், எல்லாவற்றுக்கும் எனது உயரம் தான் காரணம்" என்றார்.

உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7 வரை, ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

ஆபாச படம்: நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!

கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

SCROLL FOR NEXT