முகப்பு
இந்தியா

ஹைதராபாத்தில் 36 ரயில் சேவைகள் ரத்து

ஹைதராபாத்தில் பராமரிப்பு நடவடிக்கை காரணமாக 36 ஏம்.எம்.டி.எஸ் ரயில்களைத் தென்னக மத்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:13 AM
பகிர்:

ஹைதராபாத்தில் பராமரிப்பு நடவடிக்கை காரணமாக 36 ஏம்.எம்.டி.எஸ் ரயில்களைத் தென்னக மத்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. 

லிங்கம்பள்ளி மற்றும் டிஹதராபாத் இடையே 9 ரயில் சேவைகளும், ஹைதராபாத் மற்றும் லிங்கம்பள்ளி இடையே 9 ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மேலும், பலக்னுமா மற்றும் லிங்கம்பள்ளி இடையே 8 ரயில் சேவைகளும், லிங்கம்பள்ளி மற்றும் பலக்னுமா இடையே 8 ரயில்களையும், செகந்திராபாத் மற்றும் லிங்கம்பள்ளி இடையே 1 ரயில் சேவையும், செகந்திராபாத் மற்றும் லிங்கம்பள்ளி இடையே 1 ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாதை பராமரிப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஒரு வாரமாக ரயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஜன.18-ஆம் தேதி சுமார் 79 ரயில் சேவைகளில், கிட்டத்தட்ட 36 சேவைகள் ரத்து செய்யப்பட்டது. ஜன.18-ல் 22 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 

மல்டி-மாடல் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் (எம்எம்டிஎஸ்) இரட்டை நகரங்களான ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் மற்றும் புறநகர்ப் பகுதிகளை இணைக்கிறது. புறநகர் ரயில்கள், நகரத்திற்குள் மற்றும் புறநகர் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →