இந்தியா

தில்லி தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும் விகிதம் 11.79%

DIN


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,760 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,844 பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் 5,760 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 11.79 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 14,836 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 30 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,97,471 ஆக உயர்ந்துள்ளது. இதில் 17,26,681 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 25,650 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 45,140 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் 11,723 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 2,91,88,707 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT