முகப்பு
இந்தியா

இந்தியாவில் தினசரி பாதிப்பு 3ஆவது நாளாக தொடர்ந்து குறைவு: ஒரேநாளில் 3,06,064 பேருக்கு கரோனா

இந்தியாவில் தினசரி பாதிப்பு 3ஆவது நாளாக தொடர்ந்து குறைந்துள்ளது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:13 AM
பகிர்:

இந்தியாவில் தினசரி பாதிப்பு 3ஆவது நாளாக தொடர்ந்து குறைந்துள்ளது.  

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,06,064 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 22,49,335 ஆக உள்ளது.

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 439 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 4,89,848 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 2,43,495 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 3,68,04,145 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 

நாட்டில் இதுவரை 162 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 14,74,753 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 71.69 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.