இந்திய குடியரசு நாளையொட்டி அட்டாரி எல்லையில் இந்திய - பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் இனிப்பு பகிர்ந்து கொண்டாடினர்.
நாடு முழுவதும் 73-வது குடியரசு நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றன. தில்லி ராஜபாதையில் தேசிய கொடியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றி வைத்து முப்படைகளின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதையும் படிக்க | கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்
இந்நிலையில், இந்திய - பாகிஸ்தான் எல்லையான அட்டாரியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினரும் இனிப்புகளையும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.