குடியரசு நாள் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிற நிலையில் இந்தோ-திபெத் எல்லையில் 15,000 அடி உயரத்தில் காவலர்கள் தேசியக் கொடியை ஏந்தி மரியாதை செலுத்தினர்.
நாட்டின் 73-வது குடியரசு நாளான இன்று பல்வேறு மாநிலங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தோ-திபெத் எல்லைக் காவலர்கள் லடாக் எல்லைப் பகுதியில் 15,000 அடி உயரத்தில் மைனஸ் 35 டிகிரி குளிரில் தேசியக் கொடியை ஏந்தி மரியாதை செலுத்தியுள்ளனர்.
அதேபோல், உத்தர்கண்ட் மாநிலத்தின் குமண் பகுதியில் 12,000 அடி உயரத்தில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு நாள் கொண்டாடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.