கோப்புப்படம் 
இந்தியா

கேரளத்தில் இருப்பது ஒமைக்ரான் அலை: சுகாதாரத் துறை அமைச்சர்

கேரளம் எதிர்கொண்டிருக்கும் மூன்றாம் அலை ஒமைக்ரான் அலை என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

DIN


கேரளம் எதிர்கொண்டிருக்கும் மூன்றாம் அலை ஒமைக்ரான் அலை என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 51,739 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 58.26 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:

"கேரளத்திலுள்ள மூன்றாம் அலை ஒமைக்ரான் அலை என்பது தற்போது தெளிவாகிவிட்டது. கரோனா நோயாளிகளின் 94 சதவிகித மாதிரிகளில் ஒமைக்ரான் வகை கரோனா இருக்கிறது. டெல்டா வகை 6 சதவிகித மாதிரிகளில் உள்ளது.

மற்ற இடங்களிலிருந்து கேரளம் வந்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 20 சதவிகிதம் பேர் டெல்டா வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார் அவர்.

முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை அதிகளவாக 55,475 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. நோய்த் தொற்று காலத்திலேயே இதுதான் ஒருநாள் அதிகளவு பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT