இந்தியா

மகாராஷ்டிரத்தின் 12 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் ரத்து: உச்சநீதிமன்றம்

DIN

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் 12 போ் ஓராண்டு காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஜூலை 5, 2021இல் நடைபெற்ற  மழைக்கால கூட்டத்தொடரின் போது பாஜகவின் 12 எம்.எல்.ஏ.க்கள் அப்போதைய தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் பாஸ்கர் ஜாதவின் அறைக்கு சென்று பிரச்னையில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து, பிரச்னையில் ஈடுபட்ட ஆஷிஷ் ஷெலார், பராக் அல்வானி, அதுல் பட்கல்கர், யோகேஷ் சாகர், நாராயண் குச்சே, ஹரிஷ் பிம்பலே, அபிமன்யு பவார், ஜெய்குமார் ராவல், கீர்த்திகுமார் பாங்டியா, கிரிஷ் மகாஜன், ராம் சத்புட் மற்றும் சஞ்சய் குட் ஆகிய 12 உறுப்பினர்களை ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

மகாராஷ்டிர பேரவைத் தலைவரின் உத்தரவை எதிர்த்து பாஜகவின் 12 எம்.எல்.ஏ.க்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது நீதிபதி பேசியதாவது:

எம்.எல்.ஏ.க்களை ஓராண்டு காலத்திற்கு இடைநீக்கம் செய்து அரசியலமைப்பிற்கு எதிரானது. பிரச்னையில் ஈடுபடுபவர்களை ஒரு கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யலாமே தவிர, நீண்ட காலம் இடைநீக்கம் செய்ய முடியாது எனத் தெரிவித்து இடைநீக்கத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT