இந்தியா

மேற்குவங்கத்தில் பிப். 3ல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

DIN

மேற்குவங்கத்தில் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 8 முதல் 12 வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தில் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி, 8 முதல் 12 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதேபோல அன்றைய தினம் கல்லூரிகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று அறிவித்தார். 

மேலும், ஆரம்பப் பள்ளிகளைத் திறப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், தற்போது மாநிலத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT