முகப்பு
இந்தியா

மணிப்பூர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு

மணிப்பூரில்  ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:40 AM
பகிர்:

மணிப்பூரில்  ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

மணிப்பூரின் நோனி மாவட்டம் தூபுலில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை தூபுல் ரயில் நிலையம் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால், அதில் சிக்கி 7 பிராந்திய ராணுவ வீரா்கள் உள்பட 8 போ் பலியாகினா்.தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணியில் துரிதமாக ஈடுபட்டு பலியான 8 பேரது உடல்களையும் மீட்டனா்.

மேலும், 72 பேரை காணவில்லை. அதில் 43 ராணுவ வீரா்களும் அடங்குவா் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்நிலையில், இன்று தொடரும் மீட்புப் பணிகளில் இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.  அப்பகுதியில் மழை எச்சரிக்கை இருப்பதால் உயிரிழப்புகள் உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments