இந்தியா

கோடை விடுமுறைக்குப் பின் தில்லியில் இன்று பள்ளிகள் திறப்பு!

கோடை விடுமுறைக்குப் பின் தலைநகர் தில்லியில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 

DIN

கோடை விடுமுறைக்குப் பின் தலைநகர் தில்லியில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 

நாட்டில் கரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளிகள் முழுமையாக செயல்படவில்லை. மாறாக, ஆன்லைன் வகுப்புகள் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றன. 

அதுபோல கடந்த கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. 

இதையடுத்து கோடை விடுமுறைகளுக்குப் பின்னர் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் தில்லியில் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் இன்று தொடங்கியுள்ளன. 

கரோனா பாதிப்பின்றி இந்த ஆண்டு முழுவதுமாக வகுப்புகள்  நடைபெற வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிரத்னம் - விஜய் சேதுபதி - சாய் பல்லவி கூட்டணியில் புதிய படம்?

நானும் மக்களும் ரத்தமும் சதையும், உடலும் உயிரும்..! கண்கலங்கிய விஜய்

விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு

மீண்டும் நடிக்க வரும் ரம்பா!

வாக்காளர் இறுதிப் பட்டியல்! தருமபுரியில் 12.40 லட்சம் பேர்!

SCROLL FOR NEXT