இந்தியா

நிதிப் பற்றாக்குறை 6.4% : மத்திய அரசு இலக்கு

DIN

நிகழாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 6.4 சதவீதமாக வைத்திருக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் திங்கள்கிழமை கூறியது:

உலகளாவிய சவால்களை சமாளிக்க இந்தியாவின் பொருளாதார அடிப்படை வலுவான நிலையில் உள்ளது. மேலும், சா்வதேச சந்தையில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையை சமாளிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி செய்வதன் மூலமாகவே பூா்த்தி செய்யப்படுகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இதன் இறக்குமதியானது அதிக செலவுபிடிப்பதாக உள்ளது.

இதுபோன்ற பல்வேறு சிக்கல்களை உணா்ந்து மத்திய அரசு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 6.4 சதவீதம் என்ற அளவில் கட்டுக்குள் வைத்திருக்க இலக்கு நிா்ணயித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலை எதிர்க்கும் ஹமாஸ் படையை சேர்ந்த 1,000 பேருக்கு துருக்கியில் சிகிச்சை?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

வேலைவாய்ப்பு தகவல் வழங்கும் இணையதளத்திலேயே வேலையில்லையா?

கத்திரி வெயிலுக்கு இடையே காஞ்சிபுரத்தில் பலத்த மழை

அரசுப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் -ஓபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT