இந்தியா

மும்பையில் அந்தேரி சுரங்கப்பாதை தண்ணீரில் மூழ்கியது: அடுத்த 4 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை

DIN


மும்பையில் கடந் சில நாள்காக தொடர் கனமழை பெய்து வருகிறது. தனால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு எடுத்து ஒடும் நிலையில், மும்பை அந்தேரி சுரங்கப்பாதை மழை நீரில் மூழ்கியுள்ளது.  

தொடர் கனமழை காரணமாக ரயில், பேருந்துப் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அடுத்த நான்கு நாள்களுக்கு மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்யக் கூடும் என்றும், சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். 

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 107 மி.மீ மழை பெய்துள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 172 மி.மீ மழை செய்துள்ளது. 

சதாரா மாவட்டம், பிரதாப்காட் போராட் அருகே மழை காரணமாக வியாழக்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தொடர் கனமழையால் மும்பை அந்தேரி சுரங்கப்பாதை மழை நீரில் மூழ்கியுள்ளது.  

வெள்ளப்பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் இருந்து இதுவரை 3,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வந்துள்ளனர். 

இதனிடையே, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மும்பை பிருஹன் மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். நிலச்சரிவு ஏற்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், பல்வேறு பகுதிகளில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர். தேவைப்பட்டால் கூடுதலாக ஆள்கள் அனுப்பி வைக்கப்படும் என முதல்வர் ஷிண்டே தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT