தொடர் சர்ச்சையில் தவெக எம்எல்ஏக்கள்! முதல்வரை சந்தித்த பெண் எம்எல்ஏக்கள் புறப்பட்டனர்!!தாத்தா கொடுத்த சொத்தில் பேரன் பங்குகோர முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்புமாமல்லபுரத்தில் தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!துயரமான ஆட்சி; கும்பகர்ண தூக்கத்தில் அரசு! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!தவெக எம்எல்ஏக்கள் 3 நாள்கள் தனியார் விடுதியில் தங்க ஏற்பாடு?என்ன, நீதா அம்பானி குடிக்கும் தண்ணீர் பாட்டில் விலை ரூ.50 லட்சமா? உண்மை என்ன?ஆண் பல முறை திருமணம் செய்யலாம்! ஆனால்... பவன் கல்யாண் குறித்து ரேணு தேசாய்கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம்! மாணிக்கம் தாகூர்இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு... முதன்முறையாக மனம் திறந்தார் சோனியா! சுயசரிதை புத்தகத்தில்சென்னையில் நேற்று மட்டும் 147 ரெளடிகள் கைது!ஐபிஎல் டிரேடிங்! பஞ்சாப் கிங்ஸில் இணைந்தார் ஹார்திக் பாண்டியா! மும்பையில் அர்ஷ்தீப்!மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! நாளை (நவ. 12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

பஞ்சாப் முதல்வருக்கு இன்று திருமணம்

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் (48) திருமணம் சண்டீகரில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மருத்துவரான குா்பிரீத் சிங்கை (32) அவா் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாா்.

பகவந்த் மான்- குா்பிரீத் சிங்

Updated On :

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் (48) திருமணம் சண்டீகரில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மருத்துவரான குா்பிரீத் சிங்கை (32) அவா் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாா்.

இது பகவந்த் மானின் இரண்டாவது திருமணமாகும். அவரது முதல் திருமணம் கடந்த 2015-இல் முறிந்தது. முதல் திருமணம் மூலம் அவருக்கு 21 வயதில் ஒரு மகளும், 17 வயதில் மகனும் உள்ளனா். கடந்த மாா்ச் மாதம் பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்ற நிகழ்ச்சியில் அவரது மகளும், மகனும் அமெரிக்காவில் இருந்து வந்து பங்கேற்றனா்.

2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பகவந்த் மானுக்கு ஆதரவாக அவரின் மனைவி இந்தா்பிரீத் கெளா் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா். எனினும், அடுத்த ஆண்டிலேயே அவா்கள் விவாகரத்து பெற்றனா். இந்தா்பிரீத் கௌா் இப்போது அமெரிக்காவில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், பகவந்த் மான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தாா்.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில செய்தித் தொடா்பாளா் மல்வீந்தா் சிங் கூறுகையில், ‘சண்டீகரில் வியாழக்கிழமை எளிமையான முறையில் முதல்வா் பகவந்த் மானின் திருமணம் நடைபெறவுள்ளது’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைமை அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.