இஞ்சி வெல்லம் வெளியீட்டுத் தேதி!
இஞ்சி வெல்லம் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது...

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் இஞ்சி வெல்லம் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். காதல் கதையாக உருவாகும் இதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் கொல்கத்தாவில் தொடங்கியது.
அங்கு ஹவுரா பாலத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், சாய் பல்லவியும் பாடல் காட்சிக்கு நடித்து வருவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றது. தொடர்ந்து, இப்படத்திற்கு இஞ்சி வெல்லம் எனப் பெயரிட்டுள்ளதாக கிளிம்ஸ் வெளியிட்டு அறிவித்தனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு 90 நாள்களில் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இஞ்சி வெல்லம் திரைப்படம் அடுத்தாண்டு ஜன. 29 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
An update has been released regarding the film Inji Vellam, directed by Mani Ratnam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

