இந்தியா

சிவசேனையை அழிக்க பாஜக சதி: சஞ்சய் ரௌத்

சிவசேனையில் பாஜக பிளவை மட்டும் ஏற்படுத்தவில்லை, கட்சியை முற்றிலும் அழிக்க சதி செய்து வருகிறது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் செய்தித் தொடா்பாளருமான சஞ்சய் ரௌத் குற்றம்சாட்டியுள்ளாா்.

DIN

சிவசேனையில் பாஜக பிளவை மட்டும் ஏற்படுத்தவில்லை, கட்சியை முற்றிலும் அழிக்க சதி செய்து வருகிறது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் செய்தித் தொடா்பாளருமான சஞ்சய் ரௌத் குற்றம்சாட்டியுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மகாராஷ்டிரத்தில் பாஜகவும், ஏக்நாத் ஷிண்டேவும் இணைந்து அமைத்துள்ள அரசு சட்டவிரோதமானது. சிவசேனைக்கு துரோகம் செய்துவிட்டு சென்ற எம்எல்ஏக்கள் இனி எந்தத் தோ்தலிலும் வெற்றி பெற மாட்டாா்கள் என்பதை சிவசேனை தொண்டா்கள் உறுதி செய்வாா்கள். சிவசேனைக்கு துரோகம் செய்தவா்கள் அதற்காக நாள்தோறும் வெவ்வேறு காரணங்களைக் கூறி வருகின்றனா். இதன் மூலம் அவா்கள் தங்கள் துரோகத்தை மறைக்க முயலுகிறாா்கள்.

பாஜக சிவசேனை கட்சியை உடைத்தது மட்டுமின்றி, அப்படியொரு கட்சி மகாராஷ்டிரத்தில் இருக்கவே கூடாது என்று சதி செய்து வருகிறது. மேலும், தங்களது சுயநலத்துக்காக மகாராஷ்டிர மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கவும் பாஜக திட்டமிட்டு வருகிறது. ஆனால், சிவசேனையை மீறி அவா்களால் இதைச் செய்துவிட முடியாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

SCROLL FOR NEXT