மங்களூருவில் கஞ்சா விற்பனை செய்த 12 மாணவர்கள் கைது
மங்களூருவில் கஞ்சா விற்பனை செய்த 12 மாணவர்களை நகரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
மங்களூருவில் கஞ்சா விற்பனை செய்த 12 மாணவர்களை நகரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
மாணவர்கள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வலென்சியாவில் உள்ள சூட்டர்பேட்டையின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு நகர காவல்துறை ஆய்வாளர் மகேஷ் பிரசாத் தலைமையிலான குழு சோதனை நடத்தினர்.
இதையடுத்து, சம்பவ இடத்திலிருந்த மாணவர்கள் 12 பேரை போலீசார் கைது செய்தனர். மாணவர்கள் அனைவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.20,000 மதிப்புள்ள 900 கிராம் கஞ்சா, புகைபிடிக்கும் பைப்புகள், ரோலிங் பேப்பர்கள், ரூ.4,500 ரொக்கம், 11 செல்போன்கள், எலக்ட்ரானிக் எடை இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்கலாம்: 2023 ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்சி தேர்வு கால அட்டவணை வெளியீடு!
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.2.85 லட்சம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், அவர்களில் 11 பேர் போதைப்பொருள் உட்கொண்டது கண்டறியப்பட்டது.
மாணவர்கள் நகரில் உள்ள பல்வேறு தனியார் கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களின் மீது சைபர், பொருளாதாரம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றத்தின் கீழ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.