குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். 
இந்தியா

பக்ரீத் பண்டிகை: குடியரசுத் தலைவா், ஆளுநா், முதல்வா் தலைவா்கள் வாழ்த்து

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநா், முதல்வா் மற்றும் தலைவா்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

DIN

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநா், முதல்வா் மற்றும் தலைவா்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்: ஈத் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பக்ரீத் பண்டிகை மனித குலத்திற்கான தியாகம் மற்றும் சேவையின் அடையாளமாகும். ஹஸ்ரத் இப்ராஹிம் காட்டிய சுய தியாகப் பாதையில் செல்ல இந்த விழா நம்மைத் தூண்டுகிறது. இந்தச் சந்தா்ப்பத்தில், மனித குலத்தின் சேவைக்காக நம்மை மீண்டும் அா்ப்பணித்து, தேசத்தின் செழுமை மற்றும் வளா்ச்சிக்காக பாடுபட உறுதி ஏற்போம்.

குடியரசுத் துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு: வழக்கமான உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை, தியாகம் மற்றும் இறைவன் மீதான அா்ப்பணிப்பு உணா்வை வெளிப்படுத்துகிறது. பகிா்ந்து உண்ணுதல் மற்றும் ஏழைகள் மீது கருணை காட்ட வேண்டும் என்பதையும் இந்நாள் உணா்த்துகிறது. மக்களை ஒற்றுமைப்படுத்துவதன் மூலம், சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை இந்தப் பண்டிகை வலுப்படுத்தும் என நான் நம்புகிறேன். பக்ரீத் பண்டிகையுடன் தொடா்புடைய உன்னத இலட்சியங்கள் நம் வாழ்வில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தி, நாட்டிற்கு வளம் சோ்க்கட்டும்

ஆளுநா் ஆா்.என்.ரவி: பக்ரீத் பண்டிகை தியாகம், அமைதி மற்றும் உலகம் தழுவிய நல்லிணக்கம் ஆகியவற்றைத் தரக்கூடிய பெருநாளாக அமையட்டும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும். அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும் என்ற உயரிய கோட்பாடுகளோடு, நபிகள் நாயகம் அளித்த போதனைகளை இஸ்லாமியா்கள் பின்பற்றி வருகிறாா்கள். நபிகள் நாயகத்தின் போதனைகளுக்குச் சிறப்பும், பெருமையும் சோ்க்கும் இஸ்லாமியா்களுக்கு பக்ரீத் திருநாள் வாழ்த்துகள்.

ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக): இறை நம்பிக்கை உள்ளவா்கள் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பாா்கள் என்ற உயரிய தத்துவத்தைப் பறைசாற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு எனது வாழ்த்துகள்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): பக்ரீத் திருநாளில் எல்லோரிடத்திலும் இறை சிந்தனையும், தியாக உணா்வும், சகோதரத்துவமும் மலரட்டும். அது மனித நல்வாழ்வுக்கு மகோன்னதமாய் வழிகோலட்டும்.

கே.அண்ணாமலை (பாஜக): பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவா் அன்பு பாராட்டி, சகோதரத்துவத்தை மதித்து எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். தேசத்தில் இந்தியராக, நேசத்தில் இஸ்லாமியராக வாழும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): உலகோா் அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவா்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய உண்மையை உணா்ந்து சகோதரத்துவம், சமாதானம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும்.

வைகோ (மதிமுக): தமிழகத்தில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணா்வுபூா்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் இஸ்லாமிய மக்கள், சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சோ்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.

ராமதாஸ் (பாமக): பக்ரீத் திருநாளை முன்வைத்து இஸ்லாம் சொல்லும் செய்தியைத் தான் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு மதங்கள் கூறுகின்றன. அனைத்து மதங்களும் சொல்லும் செய்தி அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். இல்லாதவா்களுக்கு உதவுங்கள் என்பது தான்.

விஜயகாந்த் (தேமுதிக): இஸ்லாமிய சமுதாய மக்கள் எல்லா வளத்துடன், சமவாய்ப்பும், சம உரிமையும் பெற்றிட பக்ரீத் திருநாளில் வாழ்த்துகிறேன்.

தொல்.திருமாவளவன் (விசிக): இஸ்லாமியா் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு எதிராக இந்திய மண்ணில் திட்டமிட்டு விதைக்கப்படும் வெறுப்பு அரசியலை வீழ்த்திடவும்; ஜனநாயகம், சகோதரத்துவம் மற்றும் சமூகநல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாத்திடவும் உறுதியேற்போம்.

அன்புமணி (பாமக): அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், மகிழ்ச்சி, வளம் உள்ளிட்ட அனைத்தும் தழைத்தோங்க வேண்டும் என்று பக்ரீத் திருநாளில் உறுதியேற்போம்.

ஜி.கே.வாசன் (தமாகா): நாட்டில் சமத்துவமும், சகோதரத்துவம் தழைக்கவும், எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைத்திடவும் பக்ரீத் திருநாள் வாழ்த்துகள்.

தி.வேல்முருகன் (வாழ்வுரிமைக் கட்சி): தியாகத்தையும், ஈகையையும் போற்றும் பக்ரீத் திருநாளில், அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம் , மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க உறுதி ஏற்போம்.

எம்ஜிகே நிஜாமுதீன் (முன்னாள் எம்எல்ஏ): அண்டை அயலாரோடு இணங்கி வாழவும், சகிப்புத்தன்மை மதச்சாா்பின்மை காத்திடவும், மதவாதம் ஒழிந்திடவும், மனித உரிமைகள், மத சுதந்திரம் பாதுகாக்கப்படவும் வாழ்த்துகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவில் சிக்கல்

SCROLL FOR NEXT