சத்தீஸ்கர்: மது வழங்க மறுத்த தம்பதி சுட்டுக் கொலை
மது வழங்க மறுத்த தம்பதி சத்தீஸ்கரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மது வழங்க மறுத்த தம்பதி சத்தீஸ்கரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியான ஜாஸ்பூர் மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (ஜூலை 9) இரவு சத்தீஸ்கரின் கய்முண்டா நவபாரா கிராமத்தில் நிகழ்ந்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் துறை கூறியிருப்பதாவது: “ நடு இரவில் அடையாளம் தெரியாத மூன்று பேர் இந்த தம்பதியின் வீட்டுக் கதவினைத் தட்டி மது வழங்குமாறு கேட்டுள்ளனர். அந்த தம்பதி அவர்களுக்கு மது வழங்க மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்த தம்பதியினை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.” என்றனர்.
Advertisement
Advertisement
கொல்லப்பட்டது சந்தீப் பன்னா மற்றும் திரௌபதி எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.