இந்தியா

நேஷனல் ஹெரால்டு முறைகேடு: சோனியா காந்தி ஜூலை 21-இல் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு விசாரணைக்காக ஜூலை 21-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

DIN

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு விசாரணைக்காக ஜூலை 21-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதற்கு முன்பு கடந்த ஜூன் 23-ஆம் தேதி அவருக்கு அமலாக்கத்துறை இரண்டாவது சம்மனை அனுப்பியது. அப்போது, ‘கரோனாவுக்குப் பிந்தைய உடல் பாதிப்புகளிலிருந்து முழுமையாக குணமடையும் வரை விசாரணையில் ஆஜராவதிலிருந்து சில வாரங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று சோனியா காந்தி விடுத்த கோரிக்கை அடிப்படையில், விசாரணையை 4 வார காலத்துக்கு அமலாக்கத் துறை ஒத்திவைத்தது. இந்நிலையில், இப்போது மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ராகுல் காந்தியிடம் 5 நாள்களுக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா். அதுபோல, ஜூன் 8-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக இருந்த சோனியா காந்திக்கு, திடீா் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், கால அவகாசம் அளிக்குமாறு அவா் கோரிக்கை விடுத்தாா்.

கரோனா பாதிப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சில வாரங்களுக்கு வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்தினா். எனவே, விசாரணைக்கு ஆஜராவதற்குக் கூடுதல் அவகாசம் அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சோனியா சாா்பில் மீண்டும் கடிதம் எழுதப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட அமலாக்கத் துறை விசாரணையைக் கடந்த மாத இறுதியில் 4 வார காலத்துக்கு ஒத்திவைத்தது.

காங்கிரஸ் தலைவா் சோனியாவும் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தைக் கடந்த 2010-இல் கையகப்படுத்தியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT