கேரளத்தின் வடக்கு மாவட்டத்தில் உள்ள பையனூர் பகுதியில் உள்ள ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க(ஆர்எஸ்எஸ்) அலுவலகம் மீது செவ்வாய்க்கிழமை வெடிகுண்டுகள் வீசப்பட்டன.
இந்த சம்பவம் அதிகாலை 1 மணியளவில் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தாக்குதல் நடத்தியவர்களின் விவரம் ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் வாசிக்கலாம் | அதிமுக அலுவலகத்திற்கு சீல்: உயர்நீதிமன்றத்தில் முறையீடு
வெடிபொருள் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விசாரணை நடந்து வருகிறது.
மேலும், இந்த தாக்குதலை சிபிஐ(எம்) கட்சியினர் நடத்தியதாக ஆர்எஸ்எஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஜூன் 30 அன்று இரவு சிபிஐ(எம்) மாநிலத் தலைமையகமான எகேஜி மையத்தின் மீது குண்டு வீசப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. மேலும், அந்த வழக்கில் தாக்குதல் நடத்தியவரை இதுவரை போலீசார் அடையாளம் காணப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.