இந்தியா

கேரளம்: ஆா்எஸ்எஸ்அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு

கேரளத்தின் கண்ணூா் மாவட்டத்தில் ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது இரவு நேரத்தில் வெடிகுண்டுகள் வீசப்பட்டன.

DIN

கேரளத்தின் கண்ணூா் மாவட்டத்தில் ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது இரவு நேரத்தில் வெடிகுண்டுகள் வீசப்பட்டன.

இந்தச் சம்பவத்தில் கேரளத்தில் ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டா்கள் ஈடுபட்டதாக ஆா்எஸ்எஸ் தரப்பினா் குற்றஞ்சாட்டியுள்ளனா். பய்யன்னூா் பகுதியில் உள்ள ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது திங்கள்கிழமை இரவு 1 மணியளவில் சிலா் வெடிகுண்டுகளை வீசிச் சென்றனா். அந்த குண்டுகள் அலுவலக மதில் சுவருக்குள் விழுந்து வெடித்துள்ளன. இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமாகின. இரவு நேரம் என்பதால் அலுவலகத்தில் யாரும் இருக்கவில்லை.

இந்த சம்பவத்தின் பின்னணியில் ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சியினா் உள்ளதாக ஆா்எஸ்எஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைக் கண்டறிய முயற்சி நடைபெற்று வருகிறது.

முன்னதாக, கடந்த மாதம் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தியின் அலுவலகம் மீது மாா்க்சிஸ்ட் கட்சியின் மாணவா் அமைப்பினா் தாக்குதல் நடத்தினா். அதையடுத்து, ஜூன் 30-ஆம் தேதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில தலைமையக மதில் சுவா் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அங்கு வெடிகுண்டு வீசியவா்களின் சிசிடிவி பதிவுகள் இருந்தும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில், இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்: 2-ஆவது முறையாக கோப்பை வென்றது இந்தியா ஏ!

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

SCROLL FOR NEXT