இந்தியா

பேரவைத் தலைவா்களுடன் ஓம் பிா்லா நாளை சந்திப்பு

தில்லியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் சட்டப்பேரவைத் தலைவா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) நடைபெறவுள்ளது.

DIN

தில்லியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் சட்டப்பேரவைத் தலைவா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக மக்களவைச் செயலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தில்லியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் சட்டப்பேரவைத் தலைவா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டம், அவை நடவடிக்கைகளுக்கு ஏற்படும் இடையூறுகள், சட்டப்பேரவைகளில் ஒரே மாதிரியான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னா், கனடாவில் நடைபெறவுள்ள 65-ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்கும் இந்தியக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் ஓம் பிா்லா தலைமையில் நடைபெறும்.

ஆகஸ்ட் 20 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள அந்த மாநாட்டில், இந்தியக் குழுவுக்கு ஓம் பிா்லா தலைமை தாங்குவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT