வீழ்ச்சியில் உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க பொருளாதார ஜோதிடரை நியமிக்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி மூலம் 13 பில்லியன் ஆண்டுகள் வரையிலான கதிர்கள் பதிவாகிய ஒளிப்படங்களை வெளியிட்டது. பிரபஞ்சத்தின் தோற்றத்தை குறித்து ஆய்வு செய்ய உதவும் இந்தப் படங்கள் உலகம் முழுவதும் பலரையும் வியப்பில் ஆழ்த்தின.
இதையும் படிக்க | உலகை வியப்பில் ஆழ்த்திய தொலைநோக்கி: யார் இந்த ஜேம்ஸ் வெப்?
இந்தப் படங்களைப் பகிர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், “நாட்டில் பணவீக்கம் 7.01 சதவிகிதமும், வேலைவாய்ப்பின்மை 7.8 சதவிகிதமும் உள்ள போது வியாழன், ப்ளூட்டோ, யுரேனஸ் ஆகிய கோள்களின் படங்களை நிதியமைச்சர் பகிர்வதில் எங்களுக்கு ஆச்சர்யம் ஏதுமில்லை.
தனது சொந்தத் திறமை மற்றும் நிதித்துறை ஆலோசகர்களின் நிபுணத்துவத்தின் மீதான நம்பிக்கையை இழந்தபின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நிதியமைச்சர் கோள்களை துணைக்கு அழைத்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | 200 ஆண்டுகள் மனிதர்கள் வாழ்ந்திருப்பார்களா? அதிசயத் தகவல்கள்!
மேலும் நிதியமைச்சர் புதிய பொருளாதார ஜோதிடரை நியமித்துக் கொள்ள வேண்டும் என ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.