இந்தியா

பிகாரில் மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு

பிகாரில் உள்ள ஒரு மாவட்டத்தில் மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதித்துள்ளது. 

IANS

பிகாரில் உள்ள ஒரு மாவட்டத்தில் மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதித்துள்ளது. 

வைஷாலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு  ஆடைக் கட்டுப்பாடு விதித்து அம்மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் வீரேந்திர நாராயண் அலுவலகத்தில் இருந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

அறிவிப்பின்படி, ஆசிரியர்கள் ஜீன்ஸ், கால்சட்டை, டி-சர்ட், குர்தா-பைஜாமா போன்ற உடைகள் அணிந்து வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆண் ஆசிரியர்கள் அனைவரும் பேன்ட் மற்றும் முழு அல்லது அரைக்கை சட்டை அணிய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக பிகாரின் சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள் பணி நேரத்தில் குர்தா-பைஜாமா போன்ற சாதாரண உடைகளில் காணப்படுகின்றனர். 

சமீபத்தில் பகுதார் பஞ்சாயத்தின் பெண்கள் ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குர்தா-பைஜமா அணிந்திருப்பதை, லக்கிசராய் மாவட்ட நீதிபதி சஞ்சய் குமார் சிங் கடுமையாக விமர்சித்தார். 

ஆசிரியர்கள் இதுபோன்ற ஆடை கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால், மாணவர்கள் மத்தியில் தவறான, எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்துவதோடு, கல்வித் துறையின் மீதும் மோசமான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். 

மாணவர்களின் முன் ஆசிரியர்கள், கண்ணியமாகவும், அவர்களின் உருவம் மாணவர்களுக்கு உத்வேகத்தையும் தரக் கூடியதாகவும் இருக்க வேண்டும். எனவே, இதை மேம்படுத்துவதற்கு இதுபோன்ற முடிவை எடுத்துள்ளோம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

அரசு மருத்துவமனையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய பணியாளா்கள்

கிழக்கு கடற்கரைச் சாலையில் செப்.21-இல் போக்குவரத்து மாற்றம்

திருப்பூரில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

தேசிய ஒருமைப்பாடு முகாம்: சிக்கண்ணா கல்லூரி மாணவி தோ்வு

SCROLL FOR NEXT